தமிழ்நாடு

சமுத்திரகனியின் அடுத்த ரிலீஸ்.. 'மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - ரங்கா பட அப்டேட் - #5IN1_CINEMA !

தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

 சமுத்திரகனியின் அடுத்த ரிலீஸ்.. 'மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - ரங்கா பட அப்டேட் - #5IN1_CINEMA !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. சமுத்திரகனியின் அடுத்த ரிலீஸ்

ஒரு நடிகராக சமுத்திரக்கனிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பும் மார்க்கெட்டும் இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார் சமுத்திரகனி. கடந்த மாதங்களில் வெளியான பீம்லா நாயக், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களில் கூட முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார். அந்தவகையில் தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

பரசுராம் இயக்கியுள்ள இந்தப் படமும் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது . தொடர்ந்து, மே 13ம் தேதி தமிழில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகன் நடித்துள்ள டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

2. சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் தயாரான 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சந்தீப் கிஷனின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்.. ஆகியவை சிறந்த ஆக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதனால் இணையத்தில் வெளியான சந்தீப் கிஷனின் 'மைக்கேல்' பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட, கூடுதலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்துவருகிறது. சந்தீப் கிஷன் முதன்முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார்.

3. ஜெ.பேபி பட முதல் பாடல் அப்டேட்

அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துவரும் படம் ஜெ.பேபி . இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துவருகிறார். இந்தப் படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் மாரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் தினேஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடித்து வருகிறார். டோனி பிரிட்டோ இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9. சிபி நடிக்கும் ரங்கா பட அப்டேட்!

சத்யா படத்தினை தொடர்ந்து சிபிராஜ் ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மாயோன்,வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் டி.எல்.வினோத் மற்றும் சிபி சத்யராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரங்கா‘. இந்த படத்தை பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். ரங்கா டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .

5. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் வேழம்

இந்த வருடம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள் , மன்மத லீலை மற்றும் ஹாஸ்டல் படங்கள் வெளியானது . தொடர்ச்சியாக பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். இந்நிலையில் அவர் நடித்துவரும் புதிய படம் வேழம். இப்படத்தை சந்தீப் ஸ்யாம் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories