சினிமா

5in1_Cinema : பிரமாண்ட செட்; ஹைதராபாத்தில் படமாகிறது விஜய் 66.. வெளியான ’விக்ரம்’ பட அப்டேட்!

5in1_Cinema : பிரமாண்ட செட்; ஹைதராபாத்தில் படமாகிறது விஜய் 66.. வெளியான ’விக்ரம்’ பட அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹைதராபாத்தில் துவங்கும் `விஜய் 66' அடுத்தகட்ட படப்பிடிப்பு!

`பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்கிவருகிறார். விஜயின் 66வது படமாக உருவாகும் இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் முதற்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்குகிறது. இந்த படப்பிடிப்பிற்காக ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக விஜய், ஹைதராபாத் விமான நிலையத்தை வந்தடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மே 15ல் `விக்ரம்' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர்!

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வரும் மே 18ம் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளனர். அதற்கு முன்பாக மே 15ம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் அடுத்த படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு கன்யாகுமரி பகுதிகளில் நடந்து வருகிறது. இதனை முடித்துவிட்டு, `இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வெற்றிமாறனின் இயக்கத்தில் `வாடிவாசல்' படத்தில் நடிக்க இருக்கிறார். ஒருவேளை வெற்றிமாறன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் `விடுதலை' படம் முடிய தாமதமானால், ஜெய்பீம் இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட்டு, சுதா கோங்கரா படத்தில் இணைவார் என சொல்லப்படுகிறது. தற்போது வெற்றிமாறனின் `வாடிவாசல்', சுதாகோங்கரா இயக்கத்தில் ஒரு படம் இது இரண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படங்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜா இசையில் `அக்கா குருவி' பட பாடல்கள்!

மஜித் மஜிதி இயக்கி 1997ல வெளியான இராணிய படம் `சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. இது இப்போ வரை ஒரு க்ளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தை இயக்குநர் சாமி தமிழில் `அக்கா குருவி' என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்.

`உயிர்', `மிருகம்', `சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியவர், தன்னுடைய பாணியை முற்றிலுமாக மாற்றி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது இந்தப் படத்திலிருந்து, மூன்று வீடியோ பாடல்களை வெளியிட்டுள்ளனர். மேலும் படம் மே 6ம் தேதி வெளியாகவுள்ளது.

பாபி சிம்ஹாவின் புதிய படம் `தடை உடை'!

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆதிஃப் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 5 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories