தமிழ்நாடு

“நான் ஒரு கருவியாகப் பயன்பட்டேன்.. என்னுடைய கவலையெல்லாம்” : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

என்னுடைய கவலையெல்லாம், என்னுடைய பயமெல்லாம் இந்த நம்பிக்கையை எப்போதும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு கருவியாகப் பயன்பட்டேன்.. என்னுடைய கவலையெல்லாம்” : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்தார்.

அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதில், முக்கியமாக அரசு கடந்த ஓராண்டில் கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், “75-ஆவது சுதந்திர நாள் நினைவுத்தூண், சென்னையில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிண்டியில் மாபெரும் மருத்துவமனை, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம், சென்னையில் கலைஞர் நினைவு மண்டபம், அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம், வேளாண்மைத் துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கை, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், அறிவுசார் நகரம், சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், அரசு முன் மாதிரிப் பள்ளிகள், பத்திரிகையாளர் நலவாரியம், எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் பெயரில் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், பெரியார் பிறந்தநாள் ‘சமூகநீதி நாள்’, அம்பேத்கார் பிறந்தநாள் ‘சமத்துவநாள்’, வள்ளலார் பிறந்தநாள் ‘தனிப்பெரும் கருணை நாள்’, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள், புத்தகப் பூங்கா அமைக்க நிரந்தர இடம், கோயில் நிலங்கள் மீட்பு, 10 கலை அறிவியல் கல்லூரிகள், 11 புதிய ஐ.டி.ஐ நிறுவனங்கள், காவல் ஆணையம், பொருநை அருங்காட்சியகம், மீண்டும் மஞ்சப்பை முன்னெடுப்பு - இப்படி ஏராளமான திட்டங்களை சாதித்து வருகிறது தமிழ்நாடு அரசு. இவை அனைத்தையும், அதன் உள்ளார்ந்த நோக்கம் சிதையாமல் அமல்படுத்திக் காட்டினோம் என்றால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உயரும். அப்படி உயர்வதற்கு நான் ஒரு கருவியாகப் பயன்பட்டேன் என்பதுதான் எனக்கு இருக்கக்கூடிய மகிழ்ச்சியாகும்.

அதுமட்டுமல்லாது, “பகுத்தறிவும், பாகற்காயும் கசக்கும். ஆனால், அவை இரண்டும் உடலுக்கு மிக மிக நல்லது’’ என்றார் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய காலத்தின் தேவையான ’திராவிட மாடல்’ அரசுதான் இது.

அரசு விழாக்களில் அல்லது சாலையில் போகின்றபோது, நிகழ்ச்சிகளுக்குப் போகின்றபோது மக்கள் என்னிடம் மனு கொடுக்கும்போது, சில பேர் சொல்வார்கள். 'எத்தனையோ தடவை மனு கொடுத்துள்ளேன், ஆனால் உங்கள் கையில் கொடுக்கும்போது நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது' என்று சாதாரண, சாமானிய மக்கள் சொல்லும்போது - அவர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைதான் இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய நற்சான்று, நற்சான்று, நற்சான்று என நான் சொல்கிறேன்.

அரசியலில் மிகச் சிறு வயதிலிருந்தே இருப்பவன் நான். மக்கள் கூட்டத்தைப் பார்த்துப் பார்த்து எனக்குப் பழகிவிட்டது. மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களது முகம் காட்டிக் கொடுத்துவிடும். இந்த ஓராண்டு காலத்தில் மக்களை நோக்கி நான் செல்லும்போது, அலையைப்போல என்னை நோக்கி மக்கள் வருவதை நான் பார்க்கிறேன். அவர்களது முக மலர்ச்சி என்பது நாட்டில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதுதான் இந்த ஓராண்டு காலத்தில் நாம் செய்திருக்கக்கூடிய மகத்தான சாதனை.

என்னுடைய கவலையெல்லாம், என்னுடைய பயமெல்லாம் இந்த நம்பிக்கையை எப்போதும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் கடினமாக உழைத்தாக வேண்டும், உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த அமைச்சரவையே இன்னும் அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன்

banner

Related Stories

Related Stories