தமிழ்நாடு

ஆபாசப் படத்திற்கு அடிமை.. 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் இளைஞர் கைது: வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

ஆபாசப் படத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர் 18 முறை பாலியல் வழக்கில் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசப் படத்திற்கு அடிமை.. 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் இளைஞர் கைது: வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் ஏற்கனவே 17 முறை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011 முதல் 2020ம் ஆண்டுவரை இவர் மீது 17 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே ஆபாசப் படங்களைப் பார்த்து அதற்கு அடிமையான இவர், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories