தமிழ்நாடு

பிரியாணியோடு 1.40 லட்சம் நகைகளை விழுங்கிய நபர்: சென்னையில் ரம்ஜானுக்கு வந்த விருந்தாளியால் நடந்த பரபரப்பு

ரம்ஜான் விருந்தின்போது பிரியாணியுடன் தங்க நகைகளை ருசிபார்த்த வாலிபர். ஸ்கேன் பரிசோதனையின் மூலம் நகைகளை பிரியாணியுடன் விழுங்கியது அம்பலம்.

பிரியாணியோடு 1.40 லட்சம் நகைகளை விழுங்கிய நபர்: சென்னையில் ரம்ஜானுக்கு வந்த விருந்தாளியால் நடந்த பரபரப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி விருந்துக்கு வீட்டுக்கு அழைத்த போது பிரியாணியுடன் தங்க நகைகளை திருடி விழுங்கிய வாலிபரை ஸ்கேன் செய்ததன் மூலம் கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி. நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது நகை கடையின் மேலாளர் சாரா என்பவரை விருந்துக்கு அழைத்துள்ளார். இதையடுத்து சாரா தனது நண்பரான நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சமித் முகமது அபுபக்கருடன் தாட்சாயிணி வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளார்.

விருந்துக்கு வந்த அபூபக்கர் மற்றும் சாரா ஆகியோர் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து தாட்சாயினி வீட்டின் அலமாரியில் இருந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 3 விதமான தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு மேலாளர் சாராவுடன் வந்த அபுபக்கர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அபூபக்கரை வரவழைத்து தாட்சாயினி விசாரித்துள்ளார். இருந்தும் சந்தேகம் தீராத தாட்சாயினி அபூபக்கரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அபூபக்கரின் வயிற்றில் திருடுபோன நகைகள் இருப்பது தெரிந்தது. வீட்டில் இருந்த போது அபூபக்கர் நகைகளை திருடி பிரியாணியுடன் விழுங்கி கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபூபக்கருக்கு 2 முறை இனிமா கொடுத்தும் நகை வெளியே வரவில்லை . மேலும் அவருக்கு இனிமா கொடுக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அபூபக்கர் இயற்கை உபாதை கழித்த போது 2 நகைகள் வெளியே வந்தது. மேலும் ஒரு நகைக்காக தாட்சாயினி காத்திருக்கிறார். இதுகுறித்து தாட்சாயிணி விருகம்பாக்கம் போலிஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் நந்தினி மற்றும் போலிஸார் அபூபக்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories