தமிழ்நாடு

“அரசியல் களத்தில் நடிகர் சூர்யா - உருவான கூட்டணி” : விஜய் சேதுபதியின் பாலிவுட் துவங்கியது - 5IN1_CINEMA !

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இந்த வரிசையில் நடிகர் சூர்யா இணைந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

“அரசியல் களத்தில் நடிகர் சூர்யா - உருவான கூட்டணி” : விஜய் சேதுபதியின் பாலிவுட் துவங்கியது - 5IN1_CINEMA !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விஜய் சேதுபதியின் பாலிவுட் படமான ‘காந்தி டாக்ஸ்’ படப்பிடிப்பு துவங்கியது...

தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்துவந்த நடிகர் விஜய் சேதுபதி தற்போது மற்ற மொழி படங்களிலும் கவணம் செலுத்த துவங்கிவிட்டார். தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களை கடந்து தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அதில் கிஷோர் பாண்டுரங் இயக்கத்தில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ படமும் ஒன்று. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை பூஜையுடன் துவங்கியுள்ளனர். டார்க் காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையைக்கவுள்ளார்.

2. 'House of the Dragon' சீரிஸின் டீஸர் வெளியானது...

உலகளவில் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று தான் ‘கேம் ஆஃப் த்ரோன்’. 8 சீசன்களாக வெளியான இந்த நெடுந்தொடரின் முந்தைய கதையை தற்போது சீரிஸாக எடுத்து வருகின்றனர். 'House of the Dragon' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் சீசன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீரிஸின் டீஸர் ட்ரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் கேம் ஆஃப் த்ரோன் ரசிகர்களுக்கு House of the Dragon மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

3. சுசீந்திரன் & விஜய் ஆண்டனி பட தலைப்பு அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் மற்றும் மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் உருவாகிவருகிறது. தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘வள்ளிமயில்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மே 16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி கொடைக்கானல், தேனி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

4. அரசியல் களத்தில் நடிகர் சூர்யா..! உருவாகவிருக்கும் புதிய கூட்டணி...

சூர்யா நடிப்பில் தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள் உருவாகிவரும் நிலையில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இந்த வரிசையில் இணைந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

2024ஆம் ஆண்டு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த படம் அரசியல் ரீதியான கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

5. ‘சர்காரு வாரி பட்டா' படத்தின் அடுத்த சிங்கிள் நாளை ரிலீஸ்...

முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘சர்காரு வாரி பட்டா’. பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு தென்னிந்திய அளவில் உள்ளது. நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்த படம் வரும் மே 12ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து ‘மா.. மா... மகேஷா’ எனும் பாடலை நாளை படக்குழு வெளியிட உள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் ட்ரைலர், களாவதி பாடல் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories