சினிமா

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ சென்சார் அப்டேட்.. சிம்பு பாடிய பாடல் - தொடங்கியது ‘ஜீவி 2’ : 5IN1_CINEMA !

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கி ரிலீஸுக்கு அனுமதி அளித்துள்ளது.

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ சென்சார் அப்டேட்.. சிம்பு பாடிய பாடல் - தொடங்கியது ‘ஜீவி 2’ : 5IN1_CINEMA !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் சென்சார் அப்டேட்!

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக தன்யா ரவிசந்திரன் நடிக்க நடிகர் ஆரி அர்ஜுனன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கி ரிலீஸுக்கு அனுமதி அளித்துள்ளது. வரும் 20ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியானது!

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் ப்ரோமோஷனுக்கான வேலைகளையும் படக்குழு துவங்கியுள்ளது. சிம்புவின் குரலில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’காலத்துக்கும் நீ வேனும்’ என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

3. எஸ்.ஜே. சூர்யாவின் ‘கடமையை செய்’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கடமையை செய்’. எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் இந்த படத்தின் ப்ரோடக்‌ஷன் மற்றும் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

4. சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகியுள்ள ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் மே 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து ஜல புல ஜங், பே, ப்ரைவெட் பார்ட்டி ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கே உறித்தான கலகலப்பான காட்சிகள் நிறைந்த படமாக டான் இருக்கும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்தியுள்ளது.

5. டப்பிங் பணிகளை துவங்கிய ‘ஜீவி 2' படக்குழு!

8 தோட்டாக்கள், ஜீவி, வனம் என அடுத்தடுத்து வித்யாசமான கதைக்களங்களில் நடித்து கவணமீர்த்த நடிகர் வெற்றி அடுத்து ‘ஜீவி 2’ படத்தில் கவணம் செலுத்தி வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் தான் இந்த பாகத்தையும் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் டப்பிங் பணிகளை பூஜையுடன் துவங்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories