தமிழ்நாடு

”தேர்வுகள் உங்களை மதிப்பிட அல்ல; நீங்கள் கற்றதைதான்” - தேர்வெழுதும் மாணாக்கர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

”தேர்வுகள் உங்களை மதிப்பிட அல்ல; நீங்கள் கற்றதைதான்” - தேர்வெழுதும் மாணாக்கர்களுக்கு முதல்வர் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் +2 தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. (பத்தாம் வகுப்பு) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையோடு மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டு வெல்க என்று வாழ்த்தியுள்ளார். தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் நடந்தன.

இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு இன்று (5.5.2022) தொடங்குகிறது. இத்தேர்வு வரும் 28-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.

அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (6.5.2022) தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மொத்தம் 3,936 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 பேர், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 பேர் ஆவார்கள்.

இந்த நிலையில்தான், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

“நாளை (இன்று) பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories