தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதும் 10,+1,+2 மாணவர்கள் கவனத்திற்கு.. இடைவெளி இருந்தாலும் சரி.. தமிழக அரசு புது அறிவிப்பு

தேர்வறையில் முகக்கவசம் அணிவதா? வேண்டாமா? என்று தொடர்ச்சியாக எழும் கேள்விகள், தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து விளக்கம்

பொதுத்தேர்வு எழுதும் 10,+1,+2 மாணவர்கள் கவனத்திற்கு.. இடைவெளி இருந்தாலும் சரி.. தமிழக அரசு புது அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், தேர்வறைகள் தயார்.

கடந்த ஆண்டு, ஊரடங்கு காரணமாக பள்ளிகள் தாமதமாக துவங்கின. இதனால், மார்ச் மாதம் நடத்த இருந்த பொதுத்தேர்வு, நடப்பாண்டில், மே மாதம் நடத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, 10ம் வகுப்புக்கு மே 6 முதல் 30ம் தேதி வரையும், 11ம் வகுப்புக்கு மே 10 முதல் 31ம் தேதி வரையும், 12ம் வகுப்புக்கு மே 5 முதல் 28ம் தேதியும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் பொதுத்தேர்வுகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிக்கப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், வினாத்தாள் கசிவதை தடுக்க கட்டுப்பாட்டு மையங்களில் வைக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்வறையில் முகக்கவசம் அணிவதா? வேண்டாமா? என்று தொடர்ச்சியாக எழும் கேள்விகள், தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றியே தேர்வுகள் நடைபெறும்.

தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே எழுத வேண்டும். ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுத உள்ளனர். தேர்வுப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories