தமிழ்நாடு

“வீட்டுவேலைக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை” : 4 பேருக்கு ‘காப்பு’ மாட்டிய காவல்துறை !

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை போலிஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

“வீட்டுவேலைக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை” : 4 பேருக்கு ‘காப்பு’ மாட்டிய காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவர் 16 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அச்சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அவரை பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவே அவருக்கு மயக்க மருத்து கொடுத்து பலர் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பத்திற்கு தலைவனாக செயல்பட்ட கந்தசாமி என்பவரை சில நாட்களுக்கு முன்பு போலிஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து இதற்கு உடந்தையாக இருந்த தனவேல், பாலச்சந்திரன், வினோத் ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories