தமிழ்நாடு

”இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள்; அதை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்” -பேரவையில் பட்டியலிட்ட முதல்வர்

இவை தான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் தலைவர் கலைஞர் என பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள்; அதை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்” -பேரவையில் பட்டியலிட்ட முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் மின்சாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை மீதான கேள்வி நேரம் நடைபெற்றது.

அப்போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

”நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அவர் ஒருவர் தான்.

1957 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும் தான்.

1957 இல் குளித்தலை,

1962 இல் தஞ்சாவூர்,

1967, 1971 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை,

1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அண்ணா நகர்,

1989, 1991 ஆகிய ஆண்டுகளில் துறைமுகம்,

1996, 2006 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம்,

2011, 2016 ஆகிய ஆண்டுகளில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்கள். தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் என புகழாரம் பாடினார்.

”இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள்; அதை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்” -பேரவையில் பட்டியலிட்ட முதல்வர்

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

* அன்னைத் தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி!

* ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமை!

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம்!

* மகளிருக்கும் சொத்தில் பங்குண்டு என்ற சட்டம்!

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்!

*விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

* கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடிக் கடனை ரத்து!

* சென்னை தரமணியில் டைட்டல் பார்க் !

* சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்!

* சிப்காட், சிட்கோ, தொழில் வளாகங்கள் உருவாக்கம்!

* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது!

* நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்!

* அவசர ஆம்புலென்ஸ் 108 சேவை அறிமுகம்!

* இலவச மருத்துவக் காப்பீடுத் திட்டம்!

* மினி பஸ்களை கொண்டு வந்தது!

* உழவர் சந்தைகள் அமைத்தல்!

* ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி,, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள்!

* அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு!

* பெண்களுக்காக 33 சதவிகிதம் இடஒதுக்கீடு!

* இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல்!

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் !

*அனைவரும் இணைந்து வாழ சமத்துவபுரங்கள்!

* இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கியது!

* உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது!

* நுழைவுத் தேர்வு ரத்து!

* மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது!

* சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம்!

* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல்!

* ஏராளமான பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை- அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது!

இப்படி நான் சொல்லத் தொடங்கினால் இன்று முழுவதும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இவை தான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் தலைவர் கலைஞர்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories