தமிழ்நாடு

“இனப் படுகொலையை அங்கீகரிக்க வேண்டும்”: ரயில்களில் மத பிரிவினையை தூண்டும் செய்தித்தாள் - திமுக MP கண்டனம்!

சதாப்தி ரயிலில் பிரிவினையைத் தூண்டும் விதமான, அனுமதிக்கப்படாத செய்தித்தாள்கள் விநியோகிக்கபடுவது வேதனை அளிக்கிறது என தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

“இனப் படுகொலையை அங்கீகரிக்க வேண்டும்”: ரயில்களில் மத பிரிவினையை தூண்டும் செய்தித்தாள் - திமுக MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெங்களூரிலிருந்து சென்னை வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு செய்தித்தாள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ரயிலில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆர்யவர்தா எக்ஸ்பிரஸ்’ என்ற செய்தித்தாள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணி ஒருவர் இதுவரை கேள்விப்படாத செய்தித்தாளாக இருப்பதாக எண்ணி சந்தேகத்துடன் வாங்கி அதிலிருந்த செய்திகளை ஒவ்வொன்றாக ப்படித்துள்ளார். அப்போது அந்த செய்தியின் முதல் பக்கத்திலேயே “இஸ்லாமியர்களின் ஆட்சியில் இந்துக்கள், சீக்கியர்கள் புத்த மதத்தினர் படுகொலை செய்யப்படுவதை அங்கீகரிக்க வேண்டும் என்ற தலைப்பின் கீழ் ஒரு செய்தி இருந்துள்ளது. அவை முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பாகவும், மக்களிடையே பிரிவினையை தூண்டுத் வகையில் அமைந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் பல பயணிகள் செய்தித்தாளை வாங்கிவிட்டு தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு, படிக்காமல் வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கோபிகா பாசி என்ற பெண் அந்த செய்தித்தாளை புகைப்படம் எடுத்து, இந்திய ரயில்வே துறைக்கு ட்விட்டர் மூலம் அனுப்பி கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகப் பரவி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பலரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்த தி.மு.க மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இதுகுறித்து சென்னை மண்டல ரயில்வே மேலாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெங்களூர்- சென்னை சதாப்தி ரயிலில் டெக்கான் ஹெரால்டு மற்றும் உள்ளூர் செய்தித்தாள் ஆகிய இரண்டில் ஒன்றை பயணிகளின் விருப்பத்திற்கேற்ப விநியோகிக்கவே இந்திய ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவ்வாறு பிரிவினையை தூண்டும் விதமான, அனுமதிக்கப்படாத செய்தித்தாள்கள் ரயில்களில் விநியோகிக்கபடுவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல ரயில்வே மேலாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories