தமிழ்நாடு

“கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அவரது பாதம் தொட்டு வணங்குவேன்” : விழா மேடையில் நடிகர் சிவகுமார் உருக்கம்!

வள்ளுவர் கோட்டத்தை அமைத்ததற்காகவும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததற்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் உயிரோடு இருந்தால் அவரது பாதத்தை தொட்டு வணங்குவேன் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

“கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அவரது பாதம் தொட்டு வணங்குவேன்” : விழா மேடையில் நடிகர் சிவகுமார் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் நடைபெறும் விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட ஓவியப்போட்டியில் 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடிகர் சிவக்குமார் எழுதிய "திருக்குறள்-50" என்ற நூலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார். குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தால் ஆவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன். ஏனெனில் அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையும் வைத்தவர். மேலும் புறநானூற்றுத் தாய் பற்றி முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கவிதையை முழுமையாக வாசித்துக் காட்டினார்.

banner

Related Stories

Related Stories