இந்தியா

மின்சார வாகனங்கள் தீக்கிரையாவதை தடுக்க புதிய திட்டம்.. நிதி ஆயோக் வெளியிட்ட அந்த அம்சங்கள் என்ன தெரியுமா?

வரைவு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தவுடன், 40 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட மெட்ரோ நகரங்களில் முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் தீக்கிரையாவதை தடுக்க புதிய திட்டம்.. நிதி ஆயோக் வெளியிட்ட அந்த அம்சங்கள் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எலக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் செய்த பேட்டரிகளை மாற்றி மாற்றி பயன்படுத்தும் முறையை (Battery swapping) இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டம். அதற்கான வரைவு திட்டத்தை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

தற்போது தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு அதற்குறிய மின் இணைப்பில் பொருத்தி சில மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். அந்த கால தாமதத்தை குறைப்பதற்கு ஏதுவாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் பல வெளி நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

மின்சார வாகனங்கள் தீக்கிரையாவதை தடுக்க புதிய திட்டம்.. நிதி ஆயோக் வெளியிட்ட அந்த அம்சங்கள் என்ன தெரியுமா?

அதற்காக எத்தகைய வேதிப்பொருள் கொண்ட பேட்டரி வாகனங்களில் பொருத்த வேண்டும், பேட்டரி சார்ஜிங் மையங்கள், அதற்கான கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட வரைவு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படாத அம்சங்கள் கொண்டதாக பாட்டரிகள் இருக்கவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களில் இந்த swap பேட்டரி திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரைவு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தவுடன், 40 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட மெட்ரோ நகரங்களில் முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories