தமிழ்நாடு

”Mask அணிவது அவசியம்”.. பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?

பொது மக்கள் முகக் கவசம் அணிவது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

”Mask அணிவது அவசியம்”.. பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதிதாய் கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, உத்தரப்பிரதேசம் மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு பொருத்த வரையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக் கவசம் அணிவது அவசியமாகும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை. அபராதம் இல்லை என்பது மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்த வரையில் பதட்டமான சூழ்நிலை இல்லை என்றாலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக 0 என்ற அளவில் தமிழ்நாட்டில் இரப்பு சதவீதம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories