தமிழ்நாடு

“ஓராண்டுக்குள் 852 சிலைகள்.. ரூ.2600 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு” : அமைச்சர் சேகர் பாபு தகவல்!

தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“ஓராண்டுக்குள் 852 சிலைகள்.. ரூ.2600 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு” : அமைச்சர் சேகர் பாபு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மற்றும் கடத்தப்பட்ட 852 கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்குமிடம், வாகன நிறுத்துமிடம், நேர்த்திக்கடன் செலுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட பணிகளை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சிவன் கோவிலை தனியார் பள்ளி ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு கோவில்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட 852 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ. 2600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories