தமிழ்நாடு

நேற்று அறிவிப்பு.. இன்று சமத்துவநாள் கொண்டாட்டம்: அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!

அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நேற்று அறிவிப்பு.. இன்று சமத்துவநாள் கொண்டாட்டம்: அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்திற்க மலர்தூவிரி மரியாதை செலுத்தினார். பிறகு," சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்" என சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிறகு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சிலையை பரிசாக வழங்கினார்.

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories