தமிழ்நாடு

5 வயது பெண் குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்.. சமூக வலைதளத்தில் வைரலான ‘பகீர்’ வீடியோ : பின்னணி என்ன?

புதுச்சேரியில் 5 வயது பெண் குழந்தையை, தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

5 வயது பெண் குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்.. சமூக வலைதளத்தில் வைரலான ‘பகீர்’ வீடியோ : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி காவல்துறையில் காவலராகப் பணிபுரிந்து வரும் கணேஷ் என்பருக்கு,ம் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மேலும் இவர்களுக்கு வர்னிகா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கடந்த 6 மாதங்களும் முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் சாந்தி, தனது மகளை அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சாந்தியிடம் இருந்து குழந்தையை மீட்க வேண்டுமெனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories