தமிழ்நாடு

காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் தனசேகரன் என்ற லிட்டில் ஜான் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள அல்லிநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் (43). லிட்டில் ஜான் என அழைக்கப்படும் இவர் 3 அடி மட்டுமே உயரத்தில் இருப்பார். இவர் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரலமானவர்.

மேலும் கோயில் விழாக்களில் நடைபெறும் நாடங்களிலும் நடித்து வாழ்க்கையை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்றையதினம், திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

பின்னர் களைப்பாக இருப்பதாகக்கூறி தூங்கச் சென்ற லிட்டில் ஜான், காலையில் வெகுநேரம் ஆகியும் எழுந்திருக்காததை அடுத்து அவரது நண்பர்கள் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது லிட்டில் ஜான் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் அசைவின்றி கிடந்துள்ளார்.

பின்னர் அவரை மீட்டுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு லிட்டில் ஜானின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அல்லிநாயக்கன் பாளையத்தில் நடைப்பெற்றது. இதில் கலைக்குழுவைச் சேர்ந்த பலர் கலந்துக் கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

banner

Related Stories

Related Stories