தமிழ்நாடு

“டியூஷனுக்கு வந்த மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை”: வீடியோ எடுத்து மிரட்டல் - பகீர் சம்பவம்!

மதுரையில் டியூஷனுக்கு வந்த மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஆண் நண்பரை போலிஸார் கைது செய்தனர்.

“டியூஷனுக்கு வந்த மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை”: வீடியோ எடுத்து மிரட்டல் - பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரையில் டியூஷனுக்கு வந்த மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஆண் நண்பர் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த ஆசிரியை தன்னிடம் டியூஷன் பயில வந்த இரு மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுட்டதாக கூறப்படுகிறது. அதனை வீடியோவாக ஆசிரியையும், வீரமணியும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் வீரமணி மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனையடுத்து, வீரமணி மற்றும் பள்ளி ஆசிரியை மீது மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல் நிலைய போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories