தமிழ்நாடு

“கழிப்பறை தேடி அவதிப்பட்டவரா நீங்கள்?.. வந்துவிட்டது தீர்வு” : உதயநிதி அறிமுகம் செய்யும் அசத்தலான ஆப்!

‘கக்கூஸ்’ எனும் செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

“கழிப்பறை தேடி அவதிப்பட்டவரா நீங்கள்?.. வந்துவிட்டது தீர்வு” : உதயநிதி அறிமுகம் செய்யும் அசத்தலான ஆப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘கக்கூஸ்’ எனும் செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

பொது சுகாதாரத்தின் மிக முக்கியமான ‘டாய்லெட்’ பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கை தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில், “டாய்லெட்- பொதுவெளியில் எப்போதும் பேசத் தயங்கும் ஆனால் எப்போதும் பேசுபொருளாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அந்த நேரத்தில் பேசிவிட்டு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் கிடையாது.

இது நம்முடைய சுகாதாரம், ஆரோக்கியம் சார்ந்த விஷயம். சுகாதாரம் மட்டுமல்லாமல், நாம் வசிக்கிற நகரத்தோட, கிராமத்தோட இன்னும் சொல்ல போனால் நம் ஒட்டுமொத்த மாநிலத்தோட சுகாதாரமும் ஆரோக்கியமும் இதில் அடங்கியிருக்கிறது. நம்ம பயன்படுத்த தயங்குற, பயன்படுத்திட்டு சுத்தம் செய்யாமல் போகும் நம் வசிக்கும் பகுதியின் பொதுக் கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தும் அக்கறையில்லாமல் கடந்து போகும் நம்மோட அலட்சியத்தால் சுகாதார மேம்பாட்டில் நாம் சந்திக்கிற சவால்களை நாம் முதலில் உணரவேண்டும்.

நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான பிறகு அந்த தொகுதியில் உள்ள அத்தனை பொது கழிப்பிடங்களையும் நேரில் போய் ஆய்வு செய்தேன். மாநகராட்சி கழிப்பறை, மருத்துவமனை கழிப்பறை என அனைத்தையும் ஆய்வு செய்து அவற்றை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீர்படுத்துமாறு அரசு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன்.

இப்படி தீராமல் தொடரும் முக்கியமான பொது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை உண்டாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் Recycle Bin, Cheer NGO போன்ற அமைப்புகள் நம் பெருமைமிகு சென்னை மாநகராட்சியோடு இணைந்து ‘கழிப்பறை திருவிழா’ எனும் நிகழ்ச்சியை ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நடத்துகிறார்கள்.

பொதுக் கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு துறைகளை சார்ந்த அறிவியலாளர்கள், இன்னோவேட்டர்ஸ், தன்னார்வலர்கள் என பலரையும் இணைத்துக் கொண்டு விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக டாய்லெட் மேப்பத்தான் எனும் முன்னெடுப்பின் மூலம் ‘கக்கூஸ்’ எனும் செயலியை நான் அறிமுகப்படுத்த போகிறேன்.

டாய்லெட்டுக்கு ஒரு செயலியானு நீங்கள் கேட்கலாம். இன்று காய்கறி வாங்குவது முதல் ஆட்டோவில் செல்வது வரை எல்லாவற்றுக்கும் ஒரு ஆப் வந்திருக்கும்போது நம்முடைய முக்கியமான பிரச்சினையான சுகாதார பிரச்சினையான டாய்லெட்டுகளை மேப் செய்யறதுக்கு ஒரு ஆப் இருக்கக் கூடாதா என்ற கேள்விக்கான பதில்தான் இந்த ‘கக்கூஸ்’ எனும் செயலி!

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 860 பொது கழிப்பிடங்கள், இவை தவிர ஹோட்டல், மால், பெட்ரோல் பங்க் போன்ற பொது இடங்களை சுற்றியுள்ள கழிப்பிடங்களை பற்றிய முழுமையான தகவல் இந்த ‘கக்கூஸ்’ ஆப்பில் இருக்கும். நீங்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது அவை சுகாதாரமாக பயன்படுத்தும் வகையில் இருக்கிறதா, ரேட்டிங் செய்வதாக இருந்தால் எத்தனை பாயிண்ட் தருவீர்கள் போன்ற மதிப்பீடுகளை பதிய முடியும்.

“கழிப்பறை தேடி அவதிப்பட்டவரா நீங்கள்?.. வந்துவிட்டது தீர்வு” : உதயநிதி அறிமுகம் செய்யும் அசத்தலான ஆப்!

இந்த feedback மூலம் சம்பந்தப்பட்ட டாய்லெட்டுகளை மாநகராட்சி, தனியார் நிறுவனங்கள் சரி செய்து சுகாதார முறையில் பராமரிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். சுத்தமான டாய்லெட்டை பராமரிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தவும் முடியும்.

இந்த நடவடிக்கை பொது கழிப்பிடங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும். அதனால் சென்னையில் இருப்பவர்கள் இந்த கழிப்பறைத் திருவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்.

நம்ம நகரத்திற்கான சுகாதார பிரச்சினைகளை நாம் சேர்ந்து விவாதிப்போம். வாருங்கள், 3ஆம் தேதி சந்திப்போம். நீங்களும் பொது கழிப்பறை குறித்த உங்கள் அனுபவங்களை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories