தமிழ்நாடு

”பழங்குடியினர் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு” ” அதிமுக ஆட்சியினரால் மறுக்கப்பட்ட பணிக்கு அனுமதியளிப்பு!

10 ஆண்டுகளுக்கு பிறகு பழங்குடியினர் மக்களுக்கு மீண்டும் வன பொருட்களை சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

”பழங்குடியினர் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு” ” அதிமுக ஆட்சியினரால் மறுக்கப்பட்ட பணிக்கு அனுமதியளிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதியில் கிடைக்கும் கீரைகள், பழங்கள், தேனெடுத்தல், வேட்டை போன்றவை பழங்குடியின மக்களின் முந்தைய வாழ்வாதார நடைமுறையாக இருந்தது. வேட்டைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சிறு வன பொருட்களை தேவைக்கேற்ப சேகரித்து விற்பனை செய்ய மட்டும் பழங்குடியினர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதில் தேன் எடுத்தல், நெல்லிக்காய், சாதிக்காய், பூசங்கொட்டை, புளியங்கொட்டை, மரப்பாச்சி, சீமார் பொருள் ஆகியவற்றை சேகரித்து பழங்குடியினர் விற்பனை செய்து வந்த நிலையில் பழங்குடியின மக்களுக்கு கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வன பொருட்களை சேகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க ஆட்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் குறிப்பிட்ட சில வனப்பொருட்களை சேகரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டலம் வனப்பகுதியில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் உள்ள வனத்தில் சிமார் புல் அறுக்கும் பணியை பழங்குடியினர்கள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

சொக்கநள்ளி பழங்குடியினர் வனக்குழுவை சேர்ந்த பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் சீமார் புற்களை அறுத்து அதை வனத்திலேயே உலர்த்தி, காய வைத்து, சீமார் உற்பத்தியில் பழங்குடியினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories