தமிழ்நாடு

”திரைல பார்த்ததுலாம் தரையில நடக்குது” - பெண்ணுக்கு பேன் பார்க்கும் குரங்கு : உதகை அருகே நடந்த சுவாரஸ்யம்!

உதகை அருகே பெண் ஒருவருக்கு குரங்கு பேன் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

”திரைல பார்த்ததுலாம் தரையில நடக்குது” - பெண்ணுக்கு பேன் பார்க்கும் குரங்கு : உதகை அருகே நடந்த சுவாரஸ்யம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் குரங்குகள் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய தண்ணீர் குழாய்களை உடைப்பதும், கேபிள் வயர்களை அறுப்பதும், பல மரங்களை நாசம் செய்வதும் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும் குரங்குகள் போன வன உயிரினங்கள் சில குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது நுழைந்து அட்டகாசம் செய்து வந்தாலும் அவற்றில் சில அப்பகுதி மக்களிடையே நல்லுறவையும் ஏற்படுத்திக்கொள்கின்றன.

அந்த வகையில், உதகை அருகே உள்ள ஒடையரட்டி என்னும் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் குரங்கு கூட்டம் ஒன்று புகுந்துள்ளது.

இந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு குரங்கு அந்த கிராமத்தில் நடந்து சென்ற ஒரு பெண்மணியின் தோல் மேல் ஏறி அந்தப் பெண்மணியின் தலையில் பேன் பார்க்க ஆரம்பித்துள்ளது.

இதனை ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி மக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது பெண் ஒருவருக்கு குரங்கு பேன் பார்க்கும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories