தமிழ்நாடு

“முந்தைய ஆட்சியில் போன்று இல்லாமல் அதிக பயனுள்ளதாக அமைந்த முதல்வரின் துபாய் பயணம்”: “தி இந்து’’ பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் முன்பு ஆட்சியில் இருந்தோர் மேற்கொண்ட பயணங்களை விட அதிக பயனுள்ளது என்பதை நிரூபிக்கும் என்று “தி இந்து’’ ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

“முந்தைய ஆட்சியில் போன்று இல்லாமல் அதிக பயனுள்ளதாக அமைந்த முதல்வரின் துபாய் பயணம்”: “தி இந்து’’ பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்திய ஐக்கிய அமெரிக்க எமிரேட்ஸ் நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பயணம் முன்பு ஆட்சியில் இருந்தோர் மேற்கொண்ட பயணங்களை விட அதிக பயனுள்ளது என் பதை நிரூபிக்கும் என்று “தி இந்து’’ ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து “தி இந்து’’ ஆங்கில நாளேட்டின் நேற்றைய (30.3.2022) இதழில் “முதல்வரின் ஐக்கிய அரபு எமிரேட் பயணம் அவருக்கு முன்பாக சென்றவர்களை விட அதிக பயனுள்ளதாக நிரூபிக்கும் என்ற தலைப்பிலும் “மாநிலம் முதலீட்டு அளவில் அதிகப்பலன்களை எதிர்பார்த்தது’’ என்ற துணைத் தலைப்பிலும் டி.இராமகிருஷ்ணன் எழுதியுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

“தமிழ்நாடு முதலீட்டு அளவிலும், வேலை வாய்ப்புகள் உருவாக்கத்திலும் அதிகமான பலன்களை, சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட ஐக்கிய அமீரக எமிரேடு நாடுகளின் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம், இதற்கு முன்பு அவருக்கு முன்பு முதலமைச்சராக இருந்த கே.பழனிச்சாமி 2019 செப்டம்பரில் மேற்கொண்ட பயணத்தின் போது கிடைத்ததை விட அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது நடைபெற்றதைப் போல ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டன. ஆனால் தற்போதைய பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏற்கனவே பெறப்பட்ட ரூ.3,750 கோடிக்கு மாறாக தற்போது ரூ.6,100 கோடி அளவுக்கான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. தற்போதைய முயற்சிகளின் மூலம் 15,100 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மேற்கொண்ட முயற்சியில் 10,800 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

விசாரணைகள் மூலம் தெரிய வந்த செய்தி கடந்த முறை 2019ல் அரசுடன் கையெழுத்திட்ட 6 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் ரூ.450 கோடி முதலீடு செய்தது. எதிர் காலத்தில் ரூ.650 கோடி மேலும் பெறப்படலாம். இதர மூன்று நிறுவனங்களால் உத்தேசிக்கப்பட்டுள்ள திட் டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்காவது நிறுவனத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அதிகாரிகள் தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முற்றிலும் பயனளிக்கக் கூடியவை என்று நம்புகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேடுகளிலிருந்து அதிக முதலீடுகளை கவர்ந்திழுத்தது அன்னியில் சமீபத்தில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட விரிவான பொருளாதார பங்களிப்புக்கான ஒப்பந்தத்திற்கும் நன்றி கூறவேண்டும்" இவ்வாறு “தி இந்து’’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories