தமிழ்நாடு

“ஓ.பன்னீர்செல்வம் சொல்வது பொய்” : அ.தி.மு.க கும்பலின் அவதூறு அறிக்கைக்கு அமைச்சர் பதிலடி!

“கூட்டுறவுத்துறை மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு மாறானது” என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

“ஓ.பன்னீர்செல்வம் சொல்வது பொய்” : அ.தி.மு.க கும்பலின் அவதூறு அறிக்கைக்கு அமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காசோலை வழங்குகின்ற அதிகாரம் தலைவரிடம் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைக்கு அமைச்சர் இ.பெரியசாமி விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற அதிகாரம் தலைவரிடம் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் படியும், அதன் துணை விதிகளின் படியும் அன்றாடப் பணிகளில் காசோலையில் கையெழுத்து போடுகின்ற முழு அதிகாரமும் செயலாளருக்கு தான் உள்ளது. ஒருசில சங்கங்களில் செயலரும் அவருக்கு அடுத்த பதவியில் உள்ள அரசு சம்பளம் வாங்கக்கூடியவரும் சேர்ந்துதான் கையெழுத்து போடுவார்கள். இதுதான் கூட்டுறவு சங்கத்தின் சட்டத்தில் உள்ள விதி ஆகும். ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மையல்ல.

சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தலைவர் என்பது ஒரு கௌரவப் பதவியாகும். அவர்களுக்கு சம்பளம் கிடையாது. கூட்டுறவுத்துறை முழுக்க முழுக்க மாநில அரசின் பட்டியலில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட குழு, முழு அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது என கூறியுள்ளனர்.

கூட்டுறவு துறையில் உள்ள தலைவரின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகாலமாக மாற்றவேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் அனுமதியை ஒன்றிய அரசு பெறவேண்டும் அல்லது பெரும்பான்மையான மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

பதவிக் காலத்தை முடிவு செய்வது என்பது மாநில அரசுக்கு உட்பட்டது. அதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஒன்றிய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரம் இல்லை. கூட்டுறவுத்துறை மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு மாறானது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories