தமிழ்நாடு

உரிமையாளர் மீது தீரா பாசம்.. தகராறை தடுக்க வந்த வளர்ப்பு நாய் அடித்துக் கொலை.. போலிஸ் வழக்குப்பதிவு!

ஊத்தங்கரை அருகே வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற நபர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உரிமையாளர் மீது தீரா பாசம்.. தகராறை தடுக்க வந்த வளர்ப்பு நாய் அடித்துக் கொலை.. போலிஸ் வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். அவரது மனைவி புவனேஸ்வரி அதேபகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

தனது வீட்டின் அருகில் உள்ள நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில் கொட்டகை அமைப்பதில், புவனேஸ்வரி மற்றும் அவர் தாயார் மகாலட்சுமி இருவருடன் அருகே உள்ள காசிநாதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் புவனேஸ்வரி வளர்த்து வந்த நாய், காசிwaath அவர்கள் கண்முன்னே காசிநாதன் அடித்துக் கொண்டுள்ளார்.

இவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தை அடக்கமுடியாமல் அவர்கள் வளர்த்து வந்த நாயை உருட்டுகட்டையால் அடித்துக் கொன்ற காசிநாதன் மீது சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள விலங்கின பாதுகாப்பு அலுவலகத்தில் மனு கொடுடுத்துள்ளனர். வெறித்தனமாக நாயை அடித்துக் கொன்ற காசிநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

banner

Related Stories

Related Stories