தமிழ்நாடு

வீட்டில் நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் சடலம்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் குத்திக் கொலை - வாலிபர் கைது !

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர்.

வீட்டில் நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் சடலம்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் குத்திக் கொலை - வாலிபர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. கணவனைப் பிரிந்து தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் லட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே அங்கு வந்தபோலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், லட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரும் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் குடித்துவிட்டு அவரது வீட்டிற்கு வந்த ராஜா லட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவர் வலுக்கட்டாயமாக ஆசையாக இருக்க முயன்றுள்ளார். இதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் லட்சுமியைக் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories