தமிழ்நாடு

“இதுக்கு மேல சொல்லி அசிங்கப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்” : திட்ட மாற்றம் குறித்து முதல்வர் விளக்கம்!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

“இதுக்கு மேல சொல்லி அசிங்கப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்” : திட்ட மாற்றம் குறித்து முதல்வர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என்பதால் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்தார்.

அப்போது, “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்றுமேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.

இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்பட்டது குறித்து அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உயர் கல்வி உறுதித் திட்டம் மூலம் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன்பெறுவர்.

பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன்னாள் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நிதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம்.

திருமண உதவித்திட்டம் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர். அதிலும், பயனாளிகளுக்கு தங்க நாணயம் வாங்குவதில் முறைகேடு என 43 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளன.

மேலும், இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இத்திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்குமேல் கூறி திருமண உதவி திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories