தமிழ்நாடு

மதுரையில் உதயநிதி; பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்புவிழா: உற்சாக வரவேற்பளித்த உடன்பிறப்புகள்!

விடுதலைப் போராட்ட வீரரும், பேரரசருமான பெரும்பிடுகு முத்தரையர் சிலையை மதுரை ஆனையூரில் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

மதுரையில் உதயநிதி; பேரரசர்  பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்புவிழா: உற்சாக வரவேற்பளித்த உடன்பிறப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலைப் போராட்ட வீரரும், பேரரசருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு, மதுரை ஆனையூரில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை, திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவி.மெய்யநாதன், மாவட்ட செயலாளர்கள் மு.மணிமாறன், கோ. தளபதி, பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.

சென்னையில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றத்தில் நடைபெற்ற வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மதுரைக்கு சென்றார்.

அங்கிருந்து ஆனையூருக்கு சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞரணி சார்பில் தொண்டர்கள் திரண்டு ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.

இதனையடுத்து சிலை திறப்பு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., “பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை அமைப்பதற்காக தன்னுடைய 3 சென்ட் நிலத்தில் இருந்த வீட்டை இடித்துவிட்டு இடத்தை வழங்கியிருக்கக் கூடிய மாநகராட்சி கவுன்சிலர் செல்வ கணபதியின் செயல் பாராட்டுதலுக்குரியது.

இந்த நிகழ்ச்சி சிலை திறப்பு விழா என்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் என்றும் கூறலாம். ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இதே இடத்தில்தான் பிரசாரம் மேற்கொண்டேன்.

தமிழக முதலமைச்சருக்கு மிகப்பெரிய வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு அங்கீகாரத்தை தமிழக மக்கள் தேடி கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மதுரை மாநகர மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பே கடந்த 2017ம் ஆண்டு தி.மு.கழக மூத்த முன்னோடிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொற்கிழிகளை வழங்கும் விழாவை இதே மதுரையில்தான் என்னை வைத்து நடத்தியிருந்தார் அமைச்சர் மூர்த்தி. அது எனக்கு மிகவும் பெருமைமிகு தருணமாகும்.

எப்படி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு 12 முறை தொடர் வெற்றியை கொடுத்தார்களோ அதே போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ந்து மூன்று முறை வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் இந்த தமிழக மக்கள்.

தலைவர் முதலமைச்சரின் இந்த 10 மாத கால சிறப்பான ஆட்சிக்கான அங்கீகாரமாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.

இது வெறும் தனிப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த சிலையல்ல. இளைஞரணி செயலாளராக, தலைவரின் மகனாக, முத்தமிழறிஞரின் பேரனாக, உங்களில் ஒருவனாக, உங்களின் பிரதிநிதியாகவே திறந்து வைத்திருக்கிறேன்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்த முத்தரையரின் சிலை இங்கு திறக்கப்பட்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட வேண்டிய பேரரசரின் சிலை கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இந்த சிலை திறப்பு உங்களுடைய வெற்றி. ஆனால் இந்த வெற்றியை தடுக்கவும் அதிமுக ஆட்சியில் பல்வேறு சதிகளும் சூழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலை திறக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories