தமிழ்நாடு

“10 வருட போராட்டம்..நாங்க செஞ்சு காட்டியிருக்கோம்..இதுக்கு கை தட்டுங்க”:அமைச்சர் பன்ச்.. சிரித்த முதல்வர்

கருப்பு விவசாயிகளுக்கான திட்ட அறிவிப்புகளுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களும் கை தட்டலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

“10 வருட போராட்டம்..நாங்க செஞ்சு காட்டியிருக்கோம்..இதுக்கு கை தட்டுங்க”:அமைச்சர் பன்ச்.. சிரித்த முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அசு பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு வரலாற்றிலேயே வேளாண்துறைக்குக் கடந்தாண்டு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 -23ம் ஆண்டிற்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கரும்பு விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சற்றுநேரம் தனது பட்ஜெட் தாக்கலை நிறுத்தி, “கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் கஷ்டப்பட்டனர். பின்னர் தி.மு.க அரசு பொறுப்பேற்ற உடன் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் ரூ.150 அவர்களுக்கு உயர்த்தி கொடுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.50 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைதட்டலாம். ஏன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட கைதட்டலாம்.

நாங்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது கரும்பு விவசாயிகளுக்காக இந்த அவையில் பணம் கேட்டு 10 வருடங்களாக போராடினோம். ஆனா நீங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. தற்போது நாங்கள் அதை நிறைவேற்றியுள்ளோம்” என தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது வேளாண் பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.

banner

Related Stories

Related Stories