தமிழ்நாடு

வேளாண் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி : வேளாண் பட்ஜெட்டின் 5 முக்கிய அம்சங்கள்!

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி : வேளாண் பட்ஜெட்டின் 5 முக்கிய அம்சங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022 -2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அம்சங்கள்:

60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும். வேளான் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ. 1லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

நெல் அறுவடைக்கு பின் பயிர் சாகுபடி செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 2022-2023 விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதை வழங்கப்படும்.

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 500 குறு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.71 கோடியில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

பயிர்காப்பீடு திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

19. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் “சிறப்பு ஊக்கத்தொகையாக” டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத்திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories