தமிழ்நாடு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு: 2வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த திமுக அரசு!

தி.மு.க அரசு 2வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு: 2வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த திமுக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பெறுப்பேற்ற உடன் தமிழ்நாடு வரலாற்றிலேயே வேளாண்துறைக்கு கடந்தாண்டு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 -23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம்:-

வேளாண்மையை உச்சத்திற்கு கொண்டு செல்ல இந்த நிதிநிலை அறிக்கை உதவும். கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 80 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எஞ்சிய 6 திட்டங்கள் நீண்ட கால திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. 2021 -22ம் ஆண்டில் தமிழ்நாட்டில் விவசாய பரப்பளவு அதிகரித்துள்ளது.

59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. புவி வெப்பம் அதிகரிப்பால், உணவக மேலாண்மை பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப சாகுபடி முறையை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைத்து பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.

கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தோட்டக்கலை செடிகள் வழங்கப்படுகிறது. பருவ மழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

2020-21ல் ரூ.2,055 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு இந்த ஆண்டு 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடியும், தென்னை விவசாயத்திற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories