தமிழ்நாடு

8 ஆயிரம் கோடிக்கு மேல் குறையப்போகும் வருவாய் பற்றாக்குறை.. பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் PTR தகவல்!

வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 8 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

8 ஆயிரம் கோடிக்கு மேல் குறையப்போகும் வருவாய் பற்றாக்குறை.. பட்ஜெட்  தாக்கலில் நிதியமைச்சர் PTR தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%லிருந்து 3.80 ஆக குறையும்

வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 8 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது.

முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 10,01,883 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு.

ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழ்நாடு சந்திக்கும்.

பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் வெளியிட ரூ.5 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு.

தமிழ்மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அதற்கு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories