தமிழ்நாடு

“கலைஞர் போல் செயல்படுகிறார்.. முதல்வர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” : மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி முயற்சி எடுத்து வருகிறார். இது நல்ல முயற்சி, அவர் எடுத்து வரும் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்” என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“கலைஞர் போல் செயல்படுகிறார்.. முதல்வர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” : மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“எனது நண்பர் கலைஞர், சமூக நீதியில் அக்கறை கொண்டு பெரும் முயற்சி எடுத்தார். அதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் முயற்சி எடுத்து வருகிறார். இது நல்ல முயற்சி, அவர் எடுத்து வரும் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்று பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து இருக்கின்ற முயற்சி நல்ல முயற்சி! சமூக நீதியில் அவருடைய தந்தையார் கலைஞர், என்னுடைய நண்பர் அதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். இவரும் அதே மாதிரி முயற்சி எடுத்து வருகிறார். நல்ல முயற்சிதான்!

அந்த முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories