தமிழ்நாடு

ஐபோன் 10 மேக்ஸ் வாங்க இளம்பெண் செய்த காரியம்.. புலன் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!

HDFC வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஆள்மாறாட்டம் செய்து நுகர்வோர் கடன் பெற்ற பெண் கைது.

ஐபோன் 10 மேக்ஸ் வாங்க இளம்பெண் செய்த காரியம்.. புலன் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

HDFC வங்கி லிமிடெட், ஏரியா மேனேஜர் வெங்கட்ராமன், என்பவர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், மைலாப்பூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் I Phone 10 Max செல்போனை ருபாய் 1,08,160/- க்கு Consumer Durable Loan மூலம், போலியான ஆவணங்கள் தயார் செய்து நாகப்பிரீத்தி என்பவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வாங்கி, வங்கியை ஏமாற்றிய நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வங்கி மோசடி புலனாய்வு பிரிவைச் சேர்ந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த ராதிகா (37), என்பவரை கடந்த மார்ச் 15ம் தேதி ஈரோட்டில் வைத்து போலிஸார் கைது செய்தனர்.

போலிஸாரின் புலன் விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த ராதிகா தனது உறவினரான நாகப்ரீத்தி என்பவரின் பான்கார்டினை உபயோகப்படுத்தி போலியான வாகன ஓட்டுநர் உரிமம், கார்த்திகேயன் பெயரில் வங்கி கணக்குகள் தயார் செய்து HDFC வங்கியில் சமர்பித்து ரூபாய் 1,08,160/- மதிப்புள்ள Apple I Phone 10 Max என்ற செல்போனை வாங்கி, வங்கிக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.

மேலும், ராதிகாவும் அவரது கணவர் கார்த்திக் என்பவரும் 2015, 2016ம் ஆண்டுகளில் லோன் பெற்று தருகிறேன் பாலிசி எடுங்கள் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியிருப்பதும், இதேபோல் கார் லோன் வாங்கி மோசடி செய்திருப்பதும், சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஷோரும்களில் Consumer Durable Loan மூலமாக பல்வேறு பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து பொருட்களை வாங்கி மோசடி செய்திருப்பதும், Flipkartல் பொருட்கள் வாங்கி அதில் உள்ள பொருட்களை மாற்றி ஏமாற்றியிருப்பதும் இது தொடர்பாக கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, மதுரை போன்று பல இடங்களில் இவர்கள் மீது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ராதிகா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மேலும் கடந்த 4 மாதங்களில் மட்டும் போலியான ஆவணங்களை கொடுத்து Consumer Durable Loan பெற்று ஏமாற்றிய நான்கு நபர்களை வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே Consumer Durable Loan வாங்குபவர்கள் உண்மையான தகவலை தெரிவித்தும், உண்மையான ஆவணங்களை சமர்பித்து லோன் பெறுமாறும், போலியான ஆவணங்கள் சமர்பித்து லோன் பெற்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories