தமிழ்நாடு

”லண்டன்ல வேலை; என்ன கொஞ்சம் செலவாகும்..” - ரூ.38 லட்சத்தை அபேஸ் செய்த கோவை டெக்கி சிக்கியது எப்படி?

லண்டனில் வேலை வாங்கி தருவதாக 38 லட்சம் மோசடி கோவையை சேர்ந்த ஒருவர் கைது.

”லண்டன்ல வேலை; என்ன கொஞ்சம் செலவாகும்..” - ரூ.38 லட்சத்தை அபேஸ் செய்த கோவை டெக்கி சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யன். வெளிநாட்டில் எம்.பி.ஏ படித்து உள்ளார். இவர், வெளிநாட்டில் படிக்க தொழில் துவங்குவதற்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகராக கோவையில் பணியாற்றி வந்துள்ளார்.

தனக்கு தெரிந்தவர்கள், தொழில் துறை வட்டாரத்தில் இருப்பவர்களை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன் கோவையை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் கார்த்திக் மற்றும் பிரபு ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

லண்டனில் பிரபலமான ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. கொரோனா காரணமாக அதிக பணியிடங்கள் காலி ஆகிவிட்டது. உங்களுக்கு அங்கு வேலை வாங்கி தருகிறேன்.

”லண்டன்ல வேலை; என்ன கொஞ்சம் செலவாகும்..” - ரூ.38 லட்சத்தை அபேஸ் செய்த கோவை டெக்கி சிக்கியது எப்படி?

லண்டனில் தங்கி வேலை செய்ய அதிக தொகையை செலவிட வேண்டியிருக்கும், தங்குமிடம், வேலை, விசா போன்றவற்றிற்காக பணம் கொடுத்தால் விரைவில் லண்டன் அனுப்புகிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய கார்த்திக் 20 லட்ச ரூபாயும், பிரபாகரன் 18 லட்ச ரூபாயும் கொடுத்துள்ளனர். மொத்தம் 38 லட்ச ரூபாய் வாங்கிய ஆதித்தன் வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இருவரும் பணத்தை திருப்பி கேட்ட போது தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் கார்த்திக் மற்றும் பிரபு இருவரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் ஆதித்யனை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், லண்டன், நியூசிலாந்து, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ஏமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமாந்தவர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories