தமிழ்நாடு

“இதுக்கு மாட்டு வண்டியே தேவலாம்”.. சொகுசு பேருந்தால் நொந்துபோன பயணிகள் - நடுவழியில் நடந்த அவலம் !

இராமநாதபுரத்திற்குச் சென்ற அடிக்கடி பேருந்து நின்று சென்றதால் சொகுசு பேருந்தில் பயணித்தவர்கள் அவதியடைந்துள்ளனர்.

“இதுக்கு மாட்டு வண்டியே தேவலாம்”.. சொகுசு பேருந்தால் நொந்துபோன பயணிகள் - நடுவழியில் நடந்த அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து புறப்பட்ட அரைமணி நேரத்திலேயே பேருந்து டயரில் காற்று பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டது. பின்னர் காற்று பிடிக்கப்பட்டு பேருந்து புறப்பட்டது.

அடுத்த ஒருமணி நேரத்திலேயே மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டு காற்று பிடிக்கப்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிருப்தியடைந்தனர். பிறகு மீண்டும் காற்று பிடிக்க பேருந்து நின்றது. இதனால் கடுப்பான பயணிகள் 'இதுதான் சொகுசு பேருந்தா?' என பொறுமை இழந்து பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் ஒருவழியாகப் பேருந்து உளுந்தூர்பேட்டை எடைகள் பகுதியில் வரும்போது பயங்கர சத்தத்துடன் பேருந்தின் டயர் வெடித்துள்ளது. இதனால் ஏற்கனவே கடுப்பிலிருந்த பயணிகள் ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளனர். இது குறித்து பேருந்து ஓட்டுநர், உரிமையாளரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகளிடம் ஓட்டுநர் சிக்கிக் கொண்டு தவித்துள்ளார்.

மேலும் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.850ஐ திருப்பி கொடுத்து மாற்றுப் பேருந்து எற்பாடு செய்து தரும்படி கூறியுள்ளனர். பின்னர் இது குறித்து போலிஸாருக்கு பயணிகள் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து உரிமையாளர் பணத்தை அனுப்பிய உடனே பயணிகளுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவதாக ஒட்டுநர் தெரிவித்தார்.

இதையடுத்து சொகுசு பேருந்து என நம்பி இப்படி பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் தங்களை நொந்து கொண்டு மாற்றுப் பேருந்துகளைப் பிடித்துகொண்டு சென்னை நோக்கிச் சென்றனர்.

banner

Related Stories

Related Stories