தமிழ்நாடு

மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டவர் பலி.. காப்பாற்ற முயன்றவருக்கு நேர்ந்த கதி: அதிர்ச்சி சம்பவம்!

திருவண்ணாமலையில் நில தகராறில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டவர் பலி.. காப்பாற்ற முயன்றவருக்கு நேர்ந்த கதி: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் சொராகொளத்தூர் கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ஏழுமலை என்பவர் தனது பக்கத்து நில உரிமையாளரான சரண்ராஜ் என்பவரை மின்சாரத்தைக் கொண்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, தூங்கிக்கொண்டிருந்த சரண்ராஜின் வலது கண்ணில் மின்சார ஒயரை வைத்த பொழுது அலறியடித்து எழுந்த பொழுது ஏழுமலையின் கையில் வைத்திருந்த மின்சார வயர் அவர் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்து ஏழுமலை சம்பவ இடத்தில் பலியானார்.

சரண் ராஜின் அலறல் சத்தம் கேட்ட அவரது உறவினர் ரேணுகோபால் அந்தப்பகுதியில் ஓடிவந்து வரும்பொழுது அருகில், இருந்த மின்சார அவரை மிதித்ததால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.

மின்சாரம் பாய்ந்த சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே

இதுகுறித்து திருவண்ணாமலை கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories