தமிழ்நாடு

ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பூசாரி... 'காப்பு' மாட்டிய போலிஸ்!

சிறுமிகளின் ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பூசாரியை போலிஸார் கைது செய்தனர்.

ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பூசாரி... 'காப்பு' மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம், கணியூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். திருமணமாகாத இவர் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றி வந்துள்ளார்.

இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்த பாலியல் தொல்லைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளது.

இந்தப் புகாரின் பேரில் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த ஃபேஸ்புக்கின் முகவரியைக் கொண்டு வைத்தியநாதனை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது, சிறுமிகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலிஸார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories