தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்ற நண்பன்.. தொலைதூரத்தில் இருந்தே நண்பனின் உயிரை காப்பாற்றிய உயிர்த்தோழன் : நடந்தது என்ன?

நண்பரின் உயிரைக் காக்க உயிர் நண்பர் துரித நடவடிக்கை எடுத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நண்பன்.. தொலைதூரத்தில் இருந்தே நண்பனின் உயிரை காப்பாற்றிய உயிர்த்தோழன் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் என்பவர் ஈரோடு நகர டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு இரவு 2 மணியளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஈரோட்டில் உள்ள தனது நண்பர் அஜீத் குமார் என்பவர் காதல் விவகாரத்தில் விஷ மாத்திரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உடனடியாக காப்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இளைஞரின் கோரிக்கையை ஏற்று, அஜீத்குமாருக்கு டி.எஸ்.பி தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது செல்போனைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, ஆய்வு செய்யுமாறு கூறியுள்ளார்.

அவரது செல்போன் சிக்னல் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தில் காண்பித்துள்ளது. இதனையடுத்து டி.எஸ்.பி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அஜீத்குமார் வீட்டிற்குச் சென்றார். அப்போது அவரது வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த அவரது பெற்றோரை எழுப்பி நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.

பின்னர் உள்ளே சென்றபோது அஜீத் மயங்கிய நிலையில் கிடந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நண்பரின் உயிரைக் காக்க உயிர் நண்பர் துரித நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories