தமிழ்நாடு

”நம்பிக்கையை விதைக்கும் தளபதியின் நகர்வுகள்” - திராவிட மாடல் ஆட்சிக்கு வலுசேர்ப்போம்! - முரசொலி செல்வம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி நாளேடு முரசொலி செல்வம் சிறப்பு கட்டுரை வரைந்துள்ளார்.

”நம்பிக்கையை விதைக்கும் தளபதியின் நகர்வுகள்” - திராவிட மாடல் ஆட்சிக்கு வலுசேர்ப்போம்! - முரசொலி செல்வம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுமையிலும், அரவணைப்பிலும் வளர்ந்த ஒரு மாபெரும் இயக்கத்தில் அவர்கள் ஆளுமைக்கு ஈடான தலைமை கிடைத்திடுமா என்ற எண்ணம் பலரிடமும் ஏன்; நம் கழகத்தினர் சிலரிடமும் இருந்தது என்பது மறுக்க இயலாததுதான். அப்போதுதான், ‘அண்ணாவைப் போல அறிவாற்றல் மிக்கவனாக நான் இல்லாமல் இருக்கலாம்; நான் தலைவர் கலைஞர் இல்லை; அவர் போலப் பேசத் தெரியாது; பேசவும் முடியாது; அவர் போல மொழியை ஆளத்தெரியாது, ஆனால் எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைப் பெற்றவன்!’ என்று சூளுரைத்து ஒரு தலைமை புறப்பட்டது.

"தன்னை வென்றவன் தரணியை வெல்வான்" எனும் தாத்பரியத்தின் வீறு கொண்ட எழுச்சியாக விசுவரூபம் எடுத்து நின்றது. ஆம்; இன்றைய தினம் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வாமன அடியாக அமைந்து பலரையும் வாய் பிளக்க வைக்கிறது. "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது" (உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு மலையை விடப் பெரிது எனப் போற்றப்படும் - கலைஞர் உரை). என்ற குறளின் அடையாளமாக அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்து தொடர்கிறது!

கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் பல ஆண்டுகாலம் தலைவர் கலைஞரோடு நெருக்கமாக இருந்தவர்! பல மேடைகளில் மட்டுமின்றி நண்பர்களிடமும் பேசும்போது, "தளபதியின் அரவணைப்பில், அணுகு முறையில் கலைஞரைக் காண்கிறேன்" - என நெகிழ்ந்து கூறுகிறார். அந்த அளவு நமது கழகத்தின் தலைவர் தளபதி இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைந்திட வியூகங்கள் வகுத்து வெற்றி ஈட்டி வருகிறார். இந்த இயக்கத்தின் கடைக்கோடித் தொண்டன் முதல் தளகர்த்தர்கள் வரை அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாக இன்று விளங்குகிறார்!

திராவிட இயக்கத்தின் அடித்தளக் கொள்கையான ‘சமூகநீதி’ - அவர் அடிமனதில் ஆழப்பதிந்துள்ளது என்பதை அவர் ஆற்றிடும் ஒவ்வொரு பணியிலும் கண்டு ஒட்டுமொத்த திராவிட சித்தாந்த ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து நின்று அவரைப் பாராட்டிப் புகழ்வதில் தெளிவாக வெளிப்படுகிறது. ‘மாநில சுயாட்சி’ என்பது வார்த்தையாக இருந்துவிடக் கூடாது. அது சரியான வடிவம்பெற வேண்டும் எனும் இலக்கு நோக்கி கலைஞர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கத் தொடங்கியுள்ளது, பிற மாநிலத் தலைவர்கள் மட்டுமின்றி சில மாநில முதல்வர்கள் வரவேற்பையும் பெற்றுள்ளது.

தளபதியின் நகர்வுகள் ஒவ்வொன்றும்; நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது.

Building a positive attitude, (நேர்மையான அணுகுமுறையைக் கட்டமைப்பது).

Winning Strategies (வெற்றிக்கான வியூகங்கள் வகுப்பது),

Motivating yourself and others everyday, (ஒவ்வொரு நாளும் - தன்னையும் மற்றவர்களையும் உத்வேகத்துடன் செயல்படத்தூண்டுவது),

Building positive self - esteem and image, (தன்மதிப்பையும், ஆற்றலையும் நேர்மறையாக உருவாக்குவது),

Building a pleasing personality, (மகிழ்வுகொள்ளும் ஆளுமையாக பரிணமிப்பது),

Setting and achieving your goals, (இலக்கை நிர்ணயித்து அதை அடைவது),

Doing the right thing for the rightreason, (சரியான காரணத்துக்காகசரியான செயலைச் செய்வது)

இவை எல்லாம் வெற்றிக்கான அடித்தளங்கள் எனத் தனது ‘You can win’ (நீங்களும் வெற்றி பெறலாம்) எனும் நூலில் Shiv Khera (ஷிவ் கேரா) குறிப்பிடுகிறார்.

உலகின் பல மொழிகளில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த அந்தநூலின் உள்ளடக்கமே மேலே குறிப்பிட்டவை. இன்றைய தினம் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலினின் தொடர் வெற்றியினைக் கூர்ந்து கவனித்து ஆராய்வோர் அந்த உள்ளடக்கத்தின் அத்தனை பண்பினையும் பெற்றிருப்பதை தெளிவாக உணர முடியும்! ஆம்; பேரறிஞர் அண்ணா; முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரைத் தொடர்ந்து ஆளுமை மிக்கத் தலைமை கிடைத்துவிட்டது.

கலைஞர் தந்த ஐம்பெரும் முழக்கங்களை மீண்டும் உரத்த குரலில் முழங்குவோம்!

அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி!

"தளபதியின் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வலுசேர்க்க உறுதுணையாவோம்.

- முரசொலி செல்வம்

banner

Related Stories

Related Stories