தமிழ்நாடு

“சாதி மதம் எல்லாம் தப்பு; எல்லாருமே தோழர்கள்தான்”: மனிதநேயம் பேசிய சிறுவன் கலாமை சந்தித்த முதல்வர்!

இணையதள தொலைக்காட்சிக்குப் மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம், தனது பெற்றோருடன் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

“சாதி மதம் எல்லாம் தப்பு; எல்லாருமே தோழர்கள்தான்”: மனிதநேயம் பேசிய சிறுவன் கலாமை சந்தித்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக நாடுகளுக்கு இடையே அதிகாரப்போட்டியில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மனிதன் கடைபிடிக்கவேண்டிய மனித நேயமும் சமத்துவமும் குறித்து உலக மக்களுக்கு பாடம் எடுத்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் தனியார் இணைய ஊடகத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்து இருப்பீர்கள். அந்த வீடியோவில் பள்ளிச் சிறுவன் ஒருவன் மனித நேயம் குறித்து தெளிவுடன் விளக்கி பேசியிருப்பான். அவன் பேசும் வார்த்தைகளிலேயே மனிதநேயம் இந்த பொது சமுகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை போகிற போக்கில் அசால்டாக விளக்கியுள்ளான் அந்த சிறுவன்.

இணையத்தை ஆக்கிரமித்த சிறுவனின் பேச்சு உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. அதன் பின்னர், இந்த சிறுவன் யார் என்றும் இந்தச் சிறு வயதில் இவருக்கு இந்தளவு பக்குவத்துடன் பேசச் சொல்லிக் கொடுத்தது பெற்றோர் குறித்தும் அறிந்து கொள்ள ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே ஆர்வமாக இருந்தனர்.

பின்னர் இணைய ஊடகங்கள் அந்த சிறுவனை சூழந்து பேச தொடங்கியதும் அந்த சிறுவனின் குடும்பம், சென்னை கண்ணகி நகரில் வசிப்பதாகவும், இச்சிறுவனின் பெயர் அப்துல் கலாம். இவன் சென்னையில் உள்ள கிருத்துவ பள்ளியில் தான் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறுவனை பாராட்டி வந்தனர். இந்நிலையில் இன்று தலைமைச் செயலாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறுவன் அப்துல் கலாம் தனது பெற்றோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

மேலும் தனது பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவனின் பெற்றோருக்கும் தனது பாராட்டை முதலமைச்சர் தெரிவித்தார். இணையங்களில் வைரலான சிறுவனை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாரட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories