தமிழ்நாடு

ஒருபக்கம் ஏழைகளுக்கு பால் விநியோகம்.. மறுபக்கம் குண்டு வீச்சு, பால் திருட்டு: அட்டகாசத்தில் AK ரசிகர்கள்!

திரையரங்களுகள் மீது தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, நாட்டுவெடிக்குண்டு வீச முயற்சி மற்றும் பால் என நினைத்து ஆவின் தயிர் பாக்கெட்டை அஜித் குமார் ரசிகர்கள் திருடியுள்ளனர்.

ஒருபக்கம் ஏழைகளுக்கு பால் விநியோகம்.. மறுபக்கம் குண்டு வீச்சு, பால் திருட்டு: அட்டகாசத்தில் AK ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடங்கி வலிமை படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சுமார் 3 வருடங்களுக்கு பிறகு படம் இன்று வெளியாகியுள்ளதால் பல இடங்களில் அஜித் குமார் ரசிகர்கள், தங்களால் முடிந்த உதவிகளை அங்கேங்கே செய்து வருகின்றனர். குறிப்பாக சிதம்பரத்தில், நடிகர் அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்மால் இலவசமாக பால் வழங்கி தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தினர். ஏழை எளிய குழந்தைகளுக்கு 25 லிட்டர் வரை பால் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் ஏழைகளுக்கு பால் விநியோகம்.. மறுபக்கம் குண்டு வீச்சு, பால் திருட்டு: அட்டகாசத்தில் AK ரசிகர்கள்!

ஆனால் பல இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் அஜித் குமார் ரசிகர்கள் நடந்ததுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது, திரையரங்களுகள் மீது தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, நாட்டுவெடிக்குண்டு வீச முயற்சி மற்றும் பால் என நினைத்து ஆவின் தயிர் பாக்கெட்டை திருடியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கே.எஸ் திரையங்கில் வலிமை படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால், கோபமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அதனை அகற்றவந்த ரசிகர்கள் மற்றும் சில போலிஸாரை சில ரசிகர்கள் தள்ளியதால் பரபரப்பு ஏற்படுள்ளது.

அதேபோல், கோவையில், காங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

அதுமட்டுமல்லாது, சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகினி திரையரங்கில் வலிமை பட கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்ய, அவ்வழியாக வந்த வண்டி ஒன்றில் இருந்த தயிர் பாக்கெட்டை பால் என நினைத்து தயிரை அஜித் ரசிகர்கள் திருடியிருக்கிறார்கள். இதுதொடர்பாக சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories