தமிழ்நாடு

மைக்கேல்பட்டி, ஹிஜாப், கோவை, மயிலாப்பூர், ஒத்த ஓட்டு : சரமாரியாக சம்பவம் செய்த மக்கள் - வென்றது தி.மு.க!

தமிழகத்தில் மதவெறி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்கும் பா.ஜ.கவிற்கு இந்த தேர்தலின் மூலம் சம்மட்டி அடி விழுந்துள்ளது.

மைக்கேல்பட்டி, ஹிஜாப், கோவை, மயிலாப்பூர், ஒத்த ஓட்டு : சரமாரியாக சம்பவம் செய்த மக்கள் - வென்றது தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது. அதேபோல்,119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது. அதேவேளையில் அ.தி.மு.க கூட்டணி மற்றும் தனியாக போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதில், ஒருபடி மேலே சென்று தமிழகத்தில் மதவெறி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்கும் பா.ஜ.கவிற்கு இந்த தேர்தலில் சம்மட்டி அடி விழுந்துள்ளது.

குறிப்பாக மதுரை மேலூரில் இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப்பைக் கழற்றுமாறு கூறி பா.ஜ.க முகவர் ரகளையில் ஈடுபட்ட வார்டில் பா.ஜ.க வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாடில் அரியலூர் மாணவி மரணத்தை மதத்தை வைத்து அரசியல் செய்தது பா.ஜ.க. இதனிடையே, மைக்கேல்பட்டி இடம்பெற்றுள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பா.ஜ.க வெற்றிபெறும் என பா.ஜ.க கும்பல் கூறி வந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தி.மு.க மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11 இடங்களில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கோவை அ.தி.மு.க கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்த நிலையிலும், தோல்வி பயத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடந்த முறையைப் போலவே இம்முறையும், ஈரோடு பவானி சாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்துள்ளார். இவருக்கு பா.ஜ.கவினர் கூட ஒட்டுபோடவில்லை என்பது தெரியவருகிறது.

அதேபோல், விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளார். இந்துத்வா கருத்தியலை தமிழ்நாட்டில் புகுத்த நினைத்து ரகளையிலும், சேட்டைகளிலும் ஈடுபட்ட பா.ஜ.க கும்பலுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories