தமிழ்நாடு

எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிய தி.மு.க வேட்பாளர்.. திருநங்கை கங்கா அமோக வெற்றி!

வேலூர் மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிய தி.மு.க வேட்பாளர்.. திருநங்கை கங்கா அமோக வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாற்றுப்பாலினத்தவர்கள் பல்வேறு இழிவான பெயர்களால் அழைக்கப்பட்டுவந்த நிலையில், 2006ல் அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், ‘திருநங்கை’, ‘திருநம்பி’ எனப் பெயரிட்டு அழைக்கப்படவேண்டும் என சட்டம் இயற்றினார்.

கலைஞர் அவர்களால் 2008ஆம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்ட ஏப்ரல் 15ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ‘திருநங்கைகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இப்படி, திருநங்கைகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியது தி.மு.க ஆட்சி.

இந்நிலையில் முன்னதாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தேர்தலில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டில், தி.மு.க சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட திருநங்கை ரியா, 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் திருநங்கை கவுன்சிலர் என்ற புகழைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது வேலூர் மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க சார்பில் திருநங்கை கங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர வாக்குச் சாவடியில் ஈடுபட்டார். இந்நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரான திருநங்கை கங்கா, வேலூர் மாவட்டம் ஓல்டு டவுன் பகுதியில் வசித்து வருகிறார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்து திருநங்களின் பிரச்சனைகளில் தலையீட்டு தீர்வு கண்டுள்ளார். சமூக அக்கறை உள்ள திருநங்கை கங்காவை அப்பகுதியில் அறியாத நபர்களே இருக்கமுடியாது என அப்பகுதியச் சேர்ந்த மக்கள் தெரிவித்த நிலையில், மக்கள் சேவையில், கவுன்சிலர் கங்காவாக இனி வலம் வருவார் என மக்கள் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories