தமிழ்நாடு

“அமைதியான தேர்தல் என அனைவரும் பாராட்டுகிறபோது.. ஜெயக்குமார் மட்டும் வீணாக நாடகமாடுவதா?” : மா.சு கண்டனம்!

ஜெயக்குமார் நாடகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தல் என்று அனைவருமே பாராட்டுகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“அமைதியான தேர்தல் என அனைவரும் பாராட்டுகிறபோது.. ஜெயக்குமார் மட்டும் வீணாக நாடகமாடுவதா?” : மா.சு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று (20-02-2022) சென்னை மெரினாக் கடற்கரை வந்தடைந்த 3 அலங்கார ஊர்திகளை பொது மக்கள் 4 நாட்கள் பார்வையிட தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வுக்குப் பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலும் மிக அமைதியாக நடத்தப்பட்டுள்ளது.

அதேப்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் கூடுதல் கவனத்துடன் நடத்தப்பட்டு ஒரு சில இடங்களில் சிறு சிறு நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்று பெசன்ட் நகரில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைந்ததால் தி.மு.க.வின் வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தை ஊதி பெரிதாக்கும் ஜெயக்குமார் நாடகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தல் என்று அனைவருமே பாராட்டுகின்றனர்" இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories