வைரல்

“கழிவுகளை காலம் சுமப்பதில்லை.. விரைவில் சிறையில் காலம் கழிப்பீர்”: எடப்பாடி பழனிசாமியை சாடும் ஆலஞ்சியார்!

எச்சரிக்கை எடப்பாடி.பழனிசாமியே.. கழிவுகளை காலம் சுமப்பதில்லை.. நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கைத் தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்கள் வீழ்வதில்லை..

“கழிவுகளை காலம் சுமப்பதில்லை.. விரைவில் சிறையில் காலம் கழிப்பீர்”: எடப்பாடி பழனிசாமியை சாடும் ஆலஞ்சியார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீபத்திய எ.பழனிசாமியின் பேச்சுக்கள் விரக்தியைக் காட்டுகிறது. ஜனநாயக நடைமுறைகளை கற்றோ தெரிந்தோ அரசியலுக்கு வந்தவரில்லை. ஒரு கொலை வழக்கு; அதைத்தொடர்ந்து ஈரோடு முத்துசாமியின் தயவு - அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தது.

விசுவாசமாக இருப்பதைப்போல நடித்து கொள்ளையடித்ததை சரியாக உடையவரிடம் ஒப்படைத்து காத்திருந்து காலில் விழுந்த விபத்தாய் முதல்வராகி, செய்த தப்பிற்கு தண்டனைக்குப் பயந்து முழுமையாக தன்னை அடிமைபடுத்திக் கொண்டு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூட செய்யத் தயங்கியதை நிறைவேற்றி பா.ஜ.க.வின் கடைக்கண்ணில் தப்பித்து நிற்கிறவர். எங்கே எப்போது சிறைக்கதவுகளில் அடைபட நேரிடுமோ என்ற அச்ச உணர்வு மேலிட உளறுகிறார்.

அமாவாசைகள் வந்துபோகும் - இனி நிரந்தரம் என்ற சொல்லின் பொருள் விளங்கும்.. ஒரே நாடு ஒரே தேர்தல் என அரசியல் அறியாமையில் இருக்கிறார்.. தி.மு.க.வின் வரலாற்றை ஒருமுறை படிக்கலாம். அண்ணாவிற்குப் பிறகு அதிகம் படித்தவனென்ற தற்பெருமை பேசி திரியும் சேக்கிழாரின் கம்பராமாயணத்தைக் கற்ற ஞானி வரலாற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.

கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத இயக்கமிது, கொஞ்சம் கண்சிமிட்டினால் போதும் அனைத்தும் கிடைக்கும். ஆனால் சமூகநீதியை அடகு வைத்து பெறத் தேவையில்லை என்ற நேர்மை. இல்லாதோர்க்கான இயக்கமிது. வண்டிக்காரன் கூட மன்னரை வீழ்த்த முடியு மென்ற வரலாற்றை எழுதிய இயக்கம்.

“carry on but remember people is watching you” என நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா முழங்கிய வரலாறு உண்டு. சமூகநீதி என்பது அடித்தட்டு மக்களுக்கும் சரியான உரிமையைப் பெற்றுத் தருவதில் இருக்கிறதென அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு தந்து அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறேன் என கலைஞரால் சபையில் உரக்க ஒலிக்க முடிந்தது.

தி.மு.க.விற்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல பழனிசாமி அவர்களே!

நாங்கள் இனப்பகையோடு மோதிக்கொண்டிருப்பவர்கள்- சாக்கடைப் புழுக்களைக் கண்டு கொள்வதில்லை.. ஆனால் சமூகம் நாற்றடிக்கக் கூடாதென்பதற்காக சுத்தம் செய்யவேண்டிவரும் .. எச்சரிக்கை. இனப்பகைவரோடு கைகோர்த்து நிற்பதால் உளறிக்கொட்டுகிறீர் .. நிற்பதற்கு காலில்லாதவன் அ.தி.மு.க.வெனும் பொய்க் காலில் ஆடுகிறான்.

உண்மையில் அ.தி.மு.க.வின் கால்கள் வலுவிழக்கக் காரணமாவதும் காலொடிந்து போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிற உண்மை விளங்குகிறபோது சிறையில் காலம் கழிப்பீர் .. எச்சரிக்கை எடப்பாடி.பழனிசாமியே.. கழிவுகளை காலம் சுமப்பதில்லை.. நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கைத் தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்கள் வீழ்வதில்லை..

ஆம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கைத் தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்.. என்றும் அறம் வெல்லும்.

- ஆலஞ்சியார்.

banner

Related Stories

Related Stories