தமிழ்நாடு

"இது கூடவா தெரியாது.. இப்பயாச்சும் தெரிஞ்சிக்குங்க".. அண்ணாமலைக்குப் பாடம் எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம்தான் என பா.ஜ.க தலைவர் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

"இது கூடவா தெரியாது.. இப்பயாச்சும் தெரிஞ்சிக்குங்க".. அண்ணாமலைக்குப் பாடம் எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் பிப்.19ம் தேதி அமைதியான முறையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவின் போது தி.மு.கவினர் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள். இதை தேர்தல் ஆணையம் நாளையாவது கண்களை மூடிக் கொள்ளாமல் விழிப்புடன் இருப்பார்களா? என கேள்வி எழுப்பி இந்திய தேர்தல் ஆணத்திடம் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் புகார் அளித்திருந்தார்.

"இது கூடவா தெரியாது.. இப்பயாச்சும் தெரிஞ்சிக்குங்க".. அண்ணாமலைக்குப் பாடம் எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்!

இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது. அதில், "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம்தான். நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும்.

உங்களுக்கு புகார் கொடுக்க வேண்டும் என்றால் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243 K & 243 ZA இன் கீழ் தனி அதிகாரிகளால் அதாவது மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன". என தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சட்டப்பிரிவுகளை கோடிட்டு காட்டி இந்திய தேர்தல் ஆணையம் பாடம் எடுத்திருக்கிறது. ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவருக்கு உள்ளாட்சித் தேர்தலை யார் நடத்துகிறார்கள் என்பது கூடவா தெரியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை வைத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க மலரும் என வாய் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்.

banner

Related Stories

Related Stories