தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸை கடத்தி சென்றபோது விபத்து.. போதை ஆசாமிக்குக் 'காப்பு' மாட்டிய போலிஸ்!

108 ஆம்புலன்ஸை கடத்தி சென்று விபத்து ஏற்படுத்தி நபரை போலிஸார் கைது செய்தனர்.

108 ஆம்புலன்ஸை கடத்தி சென்றபோது விபத்து.. போதை ஆசாமிக்குக் 'காப்பு' மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை பூ மார்க்கெட் பகுதியில் வாலிபர் ஒருவர் காயத்துடன் இருப்பதாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் வெளிய வந்த அவர் திடீரென அங்கு நின்றிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் டவுன் ஹால் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றபோது எதிர வந்த பேருந்து மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது.

பிறகு அங்கிருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்தி ஆம்புலன்ஸில் இருந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்த அந்த நபரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த நபர் திலகர் என்பதும், மேற்கொண்டு பேச மறுக்கும் அந்நபர் போதையில் இருப்பது தெரியவந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories