தமிழ்நாடு

பிப்.,26ம் தேதி தமிழ்நாட்டில் No Bag Day : இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் No Bag Day கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பின் முக்கியம் நோக்கம் குறித்த விளக்கம் இந்த செய்தித் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்.,26ம் தேதி தமிழ்நாட்டில் No Bag Day : இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் வரும் பிப்., 26-ஆம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்தப்படவுள்ளது. இதற்காக 12.63 லட்சம் மாணவர்களுக்கு 1.26 கோடியே 35 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல்நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவது ஆகும்.

பிப்.,26ம் தேதி தமிழ்நாட்டில் No Bag Day : இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? முழு விவரம்!

மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்வதற்கும் உடல், மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் 6 - 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச்செல்லும் சுமையை குறைத்து வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாக உள்ளது.

பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும். மேலும் விவசாயம் சார்ந்த அறிவுடன் மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories